குர்ஆன் 35:13 — துவக்குபவர்
அவர் பகலிற்குள் இரவை ஒன்று சேர்க்கின்றார், மேலும் இரவிற்குள் பகலை ஒன்று சேர்க்கின்றார். முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு கால அளவிற்கு ஓடும்படியாக சூரியனையும் மற்றும் சந்திரனையும் அவர் பணித்துள்ளார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; அரசுரிமை அனைத்தும் அவருக்குரியது. அவருடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் எந்த இணைத்தெய்வமும் ஒரு விதையின் ஓட்டளவிற்குக் கூட சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை.
[35:12] இரு கடல்களும் ஒரே மாதிரியானவை அல்ல; ஒன்று புதிதாகவும் மேலும் மதுரமாகவும் இருக் கின்றது, அதே சமயம் மற்றொன்று உப்பாகவும் மேலும் அருந்த இயலாததாகவும் உள்ளது. அவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் மிருதுவான இறைச்சியை உண்ணுகின்றீர்கள், மேலும் அணிவதற்கு ஆபரணங்களைப் பிரித்தெடுத்துக் கொள்கின்றீர்கள். மேலும் அவருடைய வாழ் வாதாரங்களைத் தேடியவாறு, கப்பல்கள் அவற்றினூடே சவாரி செய்வதை நீங்கள் பார்க்கின் றீர்கள், நீங்கள் நன்றியுடையவர்களாக இருந்து கொள்ளுங்கள்.
[35:14] அவர்களை நோக்கி நீங்கள் அழைத்தால், அவர் களால் உங்களைச் செவியேற்க இயலாது. அவர் கள் உங்களைச் செவியேற்றாலும், அவர்களால் உங்களுக்கு மறுமொழி அளிக்க இயலாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, அவர்கள் உங்களைக் கைவிட்டு விடுவார்கள். மிகவும் நன்கறிந்தவரைப் போல் எவரும் உங்களுக்குத் தெரிவிக்க இயலாது.