Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:14 — துவக்குபவர்

அவர்களை நோக்கி நீங்கள் அழைத்தால், அவர் களால் உங்களைச் செவியேற்க இயலாது. அவர் கள் உங்களைச் செவியேற்றாலும், அவர்களால் உங்களுக்கு மறுமொழி அளிக்க இயலாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, அவர்கள் உங்களைக் கைவிட்டு விடுவார்கள். மிகவும் நன்கறிந்தவரைப் போல் எவரும் உங்களுக்குத் தெரிவிக்க இயலாது.

[35:13] அவர் பகலிற்குள் இரவை ஒன்று சேர்க்கின்றார், மேலும் இரவிற்குள் பகலை ஒன்று சேர்க்கின்றார். முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு கால அளவிற்கு ஓடும்படியாக சூரியனையும் மற்றும் சந்திரனையும் அவர் பணித்துள்ளார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; அரசுரிமை அனைத்தும் அவருக்குரியது. அவருடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் எந்த இணைத்தெய்வமும் ஒரு விதையின் ஓட்டளவிற்குக் கூட சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை.

[35:15] மனிதர்களே, நீங்கள்தான் கடவுள்-ன் தேவை யுடையவர்கள், அதே சமயம் கடவுள் எவரொரு வருடைய தேவையுமில்லாதவர், மிக்க புகழுக் குரியவர்.