Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:31 — துவக்குபவர்

முந்திய அனைத்து வேதங்களையும் பூர்த்தி செய்கின்ற, இந்த வேதத்தில் நாம் உமக்கு வெளிப்படுத்தியவை சத்தியமேயாகும். கடவுள் தன் அடியார்களை முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.

[35:30] தாராளமாக அவர்களுக்கு அவர் பிரதி பலனளிப்பார், மேலும் அவர்கள் மீதான தன் அருட்கொடைகளைப் பெருக்குவார். அவர் மன்னிப்பவர், பாராட்டுபவர்.

[35:32] தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு வேதத்தை நாம் அனுப்பினோம், மேலும் நம் அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கும் எவரையும் அதனைப் பெறுவதற்கு நாம் அனுமதித்தோம். அதனைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் தங்கள் ஆன்மாக்களுக்கு அநீதியிழைத்துக் கொண்டனர், மற்றவர்கள் பகுதி நேரம் மட்டும் இதனை ஆதரித்தார்கள், அதே சமயம் மற்றவர்கள் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க நன்னெறியான காரியங்கள் புரிய ஆவலுடன் இருந்தனர்; இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.