Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:33 — துவக்குபவர்

அவர்கள் ஏதேனின் தோட்டங்களில் நுழை வார்கள், அங்கே அவர்கள் தங்கத்திலும் மற்றும் முத்துக்களிலுமான காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள், மேலும் அதில் அவர்களுடைய ஆடைகள் பட்டாலானதாக இருக்கும்.

[35:32] தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு வேதத்தை நாம் அனுப்பினோம், மேலும் நம் அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கும் எவரையும் அதனைப் பெறுவதற்கு நாம் அனுமதித்தோம். அதனைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் தங்கள் ஆன்மாக்களுக்கு அநீதியிழைத்துக் கொண்டனர், மற்றவர்கள் பகுதி நேரம் மட்டும் இதனை ஆதரித்தார்கள், அதே சமயம் மற்றவர்கள் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க நன்னெறியான காரியங்கள் புரிய ஆவலுடன் இருந்தனர்; இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.

[35:34] அவர்கள் கூறுவார்கள், “நமது எல்லாக் கவலைகளையும் நீக்கியதற்காகக் கடவுள்-ஐப் புகழுங்கள். நம் இரட்சகர் மன்னிப்பவர், பாராட்டுபவர்.