குர்ஆன் 35:37 — துவக்குபவர்
அங்கே அவர்கள், “எங்கள் இரட்சகரே, இங்கிருந்து எங்களை நீர் வெளியேற்றினால், நாங்கள் செய்து கொண்டிருந்த காரியங்களுக்குப் பதிலாக, நாங்கள் நன்னெறியான காரியங்கள் புரிவோம்” என்றவாறு அலறுவார்கள். கவனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடியவர்களுக்கு தொடர்ந்த நினைவூட்டல்களுடன், ஒரு வாழ்க்கை முழுவதுமான வாய்ப்பை நாம் தரவில்லையா? எச்சரிப்பவரை நீங்கள் பெற்றுக் கொள்ள வில்லையா? ஆகையால், (விளைவுகளைச்) சுவையுங்கள். வரம்பு மீறியவர்கள் தங்களுக்கு உதவி செய்ய எவரையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
[35:36] நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்தின் நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர், அங்கே அவர்கள் ஒருபோதும் மரணத்தின் மூலம் முடிவிற்கு வந்து விட மாட்டார்கள், அன்றி தண்டனை அவர்களுக்கு எப்பொழுதும் குறைக்கப் படவும் மாட்டாது. நன்றிகெட்டவர்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம்.
[35:38] கடவுள் தான் வானங்கள் மற்றும் பூமியின் எதிர்காலத்தை அறிந்தவர். ஆழ்மனதின் எண்ணங்கள் அனைத்தையும் அறிந்தவராக அவர் இருக்கின்றார்.