குர்ஆன் 35:38 — துவக்குபவர்
கடவுள் தான் வானங்கள் மற்றும் பூமியின் எதிர்காலத்தை அறிந்தவர். ஆழ்மனதின் எண்ணங்கள் அனைத்தையும் அறிந்தவராக அவர் இருக்கின்றார்.
[35:37] அங்கே அவர்கள், “எங்கள் இரட்சகரே, இங்கிருந்து எங்களை நீர் வெளியேற்றினால், நாங்கள் செய்து கொண்டிருந்த காரியங்களுக்குப் பதிலாக, நாங்கள் நன்னெறியான காரியங்கள் புரிவோம்” என்றவாறு அலறுவார்கள். கவனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடியவர்களுக்கு தொடர்ந்த நினைவூட்டல்களுடன், ஒரு வாழ்க்கை முழுவதுமான வாய்ப்பை நாம் தரவில்லையா? எச்சரிப்பவரை நீங்கள் பெற்றுக் கொள்ள வில்லையா? ஆகையால், (விளைவுகளைச்) சுவையுங்கள். வரம்பு மீறியவர்கள் தங்களுக்கு உதவி செய்ய எவரையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
[35:39] அவர்தான் பூமியின் வாரிசுகளாக உங்களை ஆக்கியவர். அதனைத் தொடர்ந்து, நம்ப மறுப்பதைத் தேர்ந்தெடுக்கும் எவராயினும் தனக்கே கேடாகத்தான் அவ்வாறு செய்கின்றார். நம்பமறுப்பவர்களுடைய நம்பிக்கையின்மை அவர்கள் பால் அவர்களுடைய இரட்சகரின் வெறுப்பை மட்டுமே அதிகரிக்கின்றது. நம்ப மறுப்பவர்களுடைய நம்பிக்கையின்மை நஷ்டத் திற்குள் அவர்களை ஆழமாக ஆழ்த்தி விடுகின்றது.