குர்ஆன் 36:51 — ய.ஸீ.
கொம்பு ஊதப்பட்டு விடும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து எழுந்து தங்கள் இரட்சகரை நோக்கிச் செல்வார்கள்.
[36:50] ஒரு மரணசாசனம் தயாரிப்பதற்குக் கூட அவர்களுக்கு நேரம் இருக்காது, அன்றி அவர்கள் தங்கள் சமூகத்தாரிடம் திரும்பி வரவும் இயலாது.
[36:52] அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். நம்முடைய மரணத்திலிருந்து நம்மை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பியது யார்? இதுதான் மிக்க அருளாளர் வாக்களித்திருந்தது. தூதர்கள் சரியானவர்களாகவே இருந்திருக்கின்றனர்” என்று கூறுவார்கள்.