குர்ஆன் 36:72 — ய.ஸீ.
மேலும் அவற்றை அவர்களுக்கு அடங்குமாறு நாம் செய்தோம்; சிலவற்றில் அவர்கள் சவாரி செய்கின்றனர், மேலும் சிலவற்றை அவர்கள் உண்ணுகின்றனர்.
[36:71] அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கும் கால்நடைகளை, நம் சொந்தக் கரங்களால், நாம் அவர்களுக்காகப் படைத்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
[36:73] அவற்றிலிருந்து மற்ற பலன்களையும், அவ்வண்ணமே பானங்களையும் அவர்கள் அடைந்து கொள்கின்றனர். அவர்கள் நன்றி யுடையவர்களாக இருக்க வேண்டாமா?