குர்ஆன் 36:81 — ய.ஸீ.
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த அந்த ஒருவர் அதைப் போன்றவற்றை மீண்டும் படைக்கும் திறன் கொண்டவர் அல்லவா? ஆம் உண்மையில்; அவர்தான் படைப்பவராகவும், எல்லாம் அறிந்தவராகவும் இருக்கின்றார்.
[36:80] அவர்தான் பசுமையான மரங்களிலிருந்து, விளக்கிற்காக நீங்கள் எரிக்கின்ற எரி பொருளைப் படைப்பவர்.
[36:82] எந்தக் கட்டளையையும் நிறைவேற்ற அவர் செய்ய வேண்டியதெல்லாம் அதன்பால் “ஆகு” என்று கூறுவதே, உடன் அது ஆகிவிடு கின்றது.