குர்ஆன் 37:102 — வரிசைப்படுத்துவோர்
அவருடன் வேலை செய்யும் அளவிற்கு அவர் வளர்ந்து விட்ட போது, அவர், “என் மகனே, நான் உன்னைப் பலி கொடுப்பதாக, ஒரு கனவில் நான் காண்கின்றேன். நீ என்ன நினைக்கின்றாய்?” என்று கூறினார். அவர், “என் தந்தையே, உமக்குக் கட்டளையிடப் பட்டதை நீர் செய்வீராக. கடவுள் நாடினால், பொறுமையுடையவனாக, என்னை நீர் காண்பீர்” என்று கூறினார்.
[37:101] ஒரு நல்ல மகனைப் பற்றிய நற்செய்தியை நாம் அவருக்குக் கொடுத்தோம்.
[37:103] அவர்கள் இருவரும் அடிபணிந்தனர், மேலும் அவர் (அவரைப் பலியிடுவதற்காக) அவரு டைய நெற்றியைக் கீழே வைத்தார்.