குர்ஆன் 38:22 — ஸ
அவருடைய அறைக்குள் அவர்கள் நுழைந்த பொழுது, அவர் திடுக்குற்றார். அவர்கள் கூறினர், “அச்சம் கொள்ளாதீர். நாங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொண் டிருக்கின்றோம், மேலும் நாங்கள் உம்முடைய நியாயமான தீர்ப்பைப் பெற விரும்புகின்றோம். எங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர், மேலும் சரியான பாதையில் எங்களை வழிநடத்து வீராக.
[38:21] அவருடைய வழிபாட்டிடத்திற்குள் இரகசியமாக நுழைந்து, சச்சரவிட்டுக் கொண்ட மனிதர் களைப் பற்றிய செய்தியை நீர் பெற்றீரா?
[38:23] “இந்த என்னுடைய சகோதரர் தொண்ணூற் றொன்பது* ஆடுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளார், அதே சமயம் நான் ஒரு ஆட்டைச் சொந்தமாகக் கொண்டிருக்கின் றேன். என்னுடைய ஆட்டையும் அவருடைய துடன் சேர்த்து விட அவர் விரும்புகின்றார், மேலும் தொடர்ந்து என்னை நெருக்கிக் கொண்டிருக்கின்றார்”.