குர்ஆன் 38:23 — ஸ
“இந்த என்னுடைய சகோதரர் தொண்ணூற் றொன்பது* ஆடுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளார், அதே சமயம் நான் ஒரு ஆட்டைச் சொந்தமாகக் கொண்டிருக்கின் றேன். என்னுடைய ஆட்டையும் அவருடைய துடன் சேர்த்து விட அவர் விரும்புகின்றார், மேலும் தொடர்ந்து என்னை நெருக்கிக் கொண்டிருக்கின்றார்”.
[38:22] அவருடைய அறைக்குள் அவர்கள் நுழைந்த பொழுது, அவர் திடுக்குற்றார். அவர்கள் கூறினர், “அச்சம் கொள்ளாதீர். நாங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொண் டிருக்கின்றோம், மேலும் நாங்கள் உம்முடைய நியாயமான தீர்ப்பைப் பெற விரும்புகின்றோம். எங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர், மேலும் சரியான பாதையில் எங்களை வழிநடத்து வீராக.
[38:24] அவர், “உம்முடைய ஆட்டை அவருடையதுடன் சேர்த்துவிடும்படி கேட்டதன் மூலம் அவர் உம்மிடம் நியாயமற்றவராக இருக்கின்றார். தங்களுடைய சொத்துக்களை ஒன்றிணை த்துக் கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் ஒருவரையொருவர் அநியாயமாக நடத்திக் கொள்கின்றனர், நம்பிக்கை கொண்டு நன்னெறிகள் புரிபவர்களைத் தவிர, மேலும் இத்தகையவர்கள் மிகச் சிலரே” என்று கூறினார். அதன் பின்னர், டேவிட் தான் சரியான தீர்ப்பைத்தான் அளித்தோமா என அறிய ஆவல் கொண்டார். நாம் அவரைச் சோதிக்கின்றோம் என்று அவர் எண்ணினார். அவர் பின்னர் தன் இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சிப் பிரார்த்தித்தார், குனிந்து விழுந்தார், மேலும் வருந்தித்திருந்தினார்.*