குர்ஆன் 38:35 — ஸ
அவர், “என் இரட்சகரே, என்னை மன்னிப்பீராக, மேலும் வேறு எவரும் ஒரு போதும் அடைந்திராத ஓர் அரசுரிமையை எனக்கு அளிப்பீராக. நீரே கொடையளிப்பவர்” என்று கூறினார்.
[38:34] இவ்விதமாக ஸாலமனை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; திரளான பொருள் வளங் களைக் கொண்டு நாம் அவருக்கு அருள் பாலித்தோம், ஆனால் அவர் உறுதியோடு அடிபணிந்தார்.*
[38:36] நாம் (அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித் தோம், மேலும்) அவர் விரும்பிய இடமெல்லாம் மழை பொழியும்வண்ணம், காற்றை அவருடைய கட்டளையின் கீழ் பணித்தோம்.