குர்ஆன் 39:15 — மக்கள் கூட்டங்கள்
“ஆகையால், நீங்கள் விரும்புகின்ற எதனையும் அவருடன் வழிபட்டுக் கொள்ளுங்கள்”. “மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத் தாருடைய ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் தான், மெய்யாகவே நஷ்டப்பட்டவர்கள் ஆவார்கள்” என்று கூறுவீராக. மிக உறுதியாக, இதுதான் உண்மையான நஷ்டமாகும்.
[39:14] கூறுவீராக, “என்னுடைய மார்க்கத்தை முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவாறு நான் வழிபடுகின்ற கடவுள், ஒரே ஒருவராக இருக்கின்றார்.
[39:16] அவர்களுக்கு மேலும், அவர்களுக்குக் கீழும் நெருப்பின் பாளங்களை அவர்கள் கொண்டிருப் பார்கள். கடவுள் இவ்விதமாகத் தன் அடியார் களை: என்னுடைய அடியார்களே, நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றார்.