குர்ஆன் 39:16 — மக்கள் கூட்டங்கள்
அவர்களுக்கு மேலும், அவர்களுக்குக் கீழும் நெருப்பின் பாளங்களை அவர்கள் கொண்டிருப் பார்கள். கடவுள் இவ்விதமாகத் தன் அடியார் களை: என்னுடைய அடியார்களே, நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றார்.
[39:15] “ஆகையால், நீங்கள் விரும்புகின்ற எதனையும் அவருடன் வழிபட்டுக் கொள்ளுங்கள்”. “மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத் தாருடைய ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் தான், மெய்யாகவே நஷ்டப்பட்டவர்கள் ஆவார்கள்” என்று கூறுவீராக. மிக உறுதியாக, இதுதான் உண்மையான நஷ்டமாகும்.
[39:17] இணைத்தெய்வங்கள் அனைத்தையும் வழி படுவதைக் கைவிட்டுவிட்டுத், தங்களை முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சிக்குத் தகுதி பெற்று விட்டார்கள். என்னுடைய அடியார்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.