குர்ஆன் 39:25 — மக்கள் கூட்டங்கள்
அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களும் நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் ஒருபோதும் எதிர்பாராதிருந்த போது தண்டனை அவர்களைத் துன்பத்திற்குள்ளாக் கியது.
[39:24] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையிலிருந்து ஒருவருடைய முகத்தைக் காத்துக் கொள்வதை விட மிகச் சிறந்தது எது? வரம்பு மீறுபவர்களிடம், “நீங்கள் சம்பாதித்தவற்றின் பின் விளைவுகளைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.
[39:26] கடவுள் இந்த வாழ்வில் அவர்களுக்கு இழிவு என்று முடிவு செய்து விட்டார், மேலும்அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாக இருக்கும்.