Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:24 — மக்கள் கூட்டங்கள்

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையிலிருந்து ஒருவருடைய முகத்தைக் காத்துக் கொள்வதை விட மிகச் சிறந்தது எது? வரம்பு மீறுபவர்களிடம், “நீங்கள் சம்பாதித்தவற்றின் பின் விளைவுகளைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.

[39:23] கடவுள் இதில் மிகச்சிறந்த ஹதீஸை வெளிப்படுத்தியுள்ளார்; முரண்பாடுகளற்ற ஒரு புத்தகம், மேலும் (சுவனத்திற்கும் நரகத் திற்குமான) இரு வழிகளையும் சுட்டிக்காட்டு கின்றது. தங்கள் இரட்சகரிடம் பயபக்தி யோடிருப்பவர்களின் தோல்கள் இதில் கூறப்பட்டவற்றிலிருந்து அஞ்சி ஒடுங்கு கின்றன, பின்னர் அவர்களுடைய தோல்களும் மற்றும் இதயங்களும் கடவுள்-ன் தூதுச் செய்திக்காக மென்மையாகி விடுகின்றன. கடவுள்-ன் வழிகாட்டல் இத்தகையதாகும்; தான் நாடுகின்ற எவர் மீதும் அவர் அதனை அளிக்கின்றார். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டவர்களைப் பொறுத்தவரை, எந்த ஒன்றும் அவர்களை வழிநடத்த முடியாது.

[39:25] அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களும் நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் ஒருபோதும் எதிர்பாராதிருந்த போது தண்டனை அவர்களைத் துன்பத்திற்குள்ளாக் கியது.