குர்ஆன் 39:23 — மக்கள் கூட்டங்கள்
கடவுள் இதில் மிகச்சிறந்த ஹதீஸை வெளிப்படுத்தியுள்ளார்; முரண்பாடுகளற்ற ஒரு புத்தகம், மேலும் (சுவனத்திற்கும் நரகத் திற்குமான) இரு வழிகளையும் சுட்டிக்காட்டு கின்றது. தங்கள் இரட்சகரிடம் பயபக்தி யோடிருப்பவர்களின் தோல்கள் இதில் கூறப்பட்டவற்றிலிருந்து அஞ்சி ஒடுங்கு கின்றன, பின்னர் அவர்களுடைய தோல்களும் மற்றும் இதயங்களும் கடவுள்-ன் தூதுச் செய்திக்காக மென்மையாகி விடுகின்றன. கடவுள்-ன் வழிகாட்டல் இத்தகையதாகும்; தான் நாடுகின்ற எவர் மீதும் அவர் அதனை அளிக்கின்றார். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டவர்களைப் பொறுத்தவரை, எந்த ஒன்றும் அவர்களை வழிநடத்த முடியாது.
[39:22] ஒருவருடைய இதயத்தைக் கடவுள் அடி பணிதலைக் கொண்டு திருப்தியுற்றதாக ஆக்கிவிட்டால், அவர் தன் இரட்சகரிடமிருந்து ஓர் ஒளியைப் பின்பற்றிக் கொண்டிருப்பார். ஆகையால், கடவுள்-ன் தூதுச்செய்திக்கு எதிராகத் தங்கள் இதயங்கள் கடினமாகிப் போனவர்களுக்கு கேடுதான்; அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டார்கள்.
[39:24] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையிலிருந்து ஒருவருடைய முகத்தைக் காத்துக் கொள்வதை விட மிகச் சிறந்தது எது? வரம்பு மீறுபவர்களிடம், “நீங்கள் சம்பாதித்தவற்றின் பின் விளைவுகளைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.