Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:22 — மக்கள் கூட்டங்கள்

ஒருவருடைய இதயத்தைக் கடவுள் அடி பணிதலைக் கொண்டு திருப்தியுற்றதாக ஆக்கிவிட்டால், அவர் தன் இரட்சகரிடமிருந்து ஓர் ஒளியைப் பின்பற்றிக் கொண்டிருப்பார். ஆகையால், கடவுள்-ன் தூதுச்செய்திக்கு எதிராகத் தங்கள் இதயங்கள் கடினமாகிப் போனவர்களுக்கு கேடுதான்; அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டார்கள்.

[39:21] விண்ணிலிருந்து கடவுள் தண்ணீரை இறக்கி அனுப்புவதையும், பின்னர் அதனை நிலத்தடிக் கிணறுகளில் தேக்கிவைப்பதையும், பின்னர் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட தாவரங்களை உற்பத்தி செய் வதையும், பின்னர் அவை மஞ்சள் நிறமாக மாறும் வரை வளர்வதையும், பின்னர் அவர் அவற்றைக் கூளங்களாக மாற்றி விடுவதையும் நீங்கள் காணவில்லையா? அறிவுத்திறன் கொண்டோருக்கு இது ஒரு நினைவூட்டலாக இருக்கவேண்டும்.

[39:23] கடவுள் இதில் மிகச்சிறந்த ஹதீஸை வெளிப்படுத்தியுள்ளார்; முரண்பாடுகளற்ற ஒரு புத்தகம், மேலும் (சுவனத்திற்கும் நரகத் திற்குமான) இரு வழிகளையும் சுட்டிக்காட்டு கின்றது. தங்கள் இரட்சகரிடம் பயபக்தி யோடிருப்பவர்களின் தோல்கள் இதில் கூறப்பட்டவற்றிலிருந்து அஞ்சி ஒடுங்கு கின்றன, பின்னர் அவர்களுடைய தோல்களும் மற்றும் இதயங்களும் கடவுள்-ன் தூதுச் செய்திக்காக மென்மையாகி விடுகின்றன. கடவுள்-ன் வழிகாட்டல் இத்தகையதாகும்; தான் நாடுகின்ற எவர் மீதும் அவர் அதனை அளிக்கின்றார். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டவர்களைப் பொறுத்தவரை, எந்த ஒன்றும் அவர்களை வழிநடத்த முடியாது.