Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:21 — மக்கள் கூட்டங்கள்

விண்ணிலிருந்து கடவுள் தண்ணீரை இறக்கி அனுப்புவதையும், பின்னர் அதனை நிலத்தடிக் கிணறுகளில் தேக்கிவைப்பதையும், பின்னர் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட தாவரங்களை உற்பத்தி செய் வதையும், பின்னர் அவை மஞ்சள் நிறமாக மாறும் வரை வளர்வதையும், பின்னர் அவர் அவற்றைக் கூளங்களாக மாற்றி விடுவதையும் நீங்கள் காணவில்லையா? அறிவுத்திறன் கொண்டோருக்கு இது ஒரு நினைவூட்டலாக இருக்கவேண்டும்.

[39:20] தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருப் பவர்களைப் பொறுத்தவரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளுடன், அவர் களுக்காகக் கட்டப்பட்ட மாளிகைகளுக்கு மேல் மாளிகைகளை அவர்கள் பெற்றிருப் பார்கள். இது கடவுள்-ன் வாக்குறுதியாகும், மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிப்பதில்லை.

[39:22] ஒருவருடைய இதயத்தைக் கடவுள் அடி பணிதலைக் கொண்டு திருப்தியுற்றதாக ஆக்கிவிட்டால், அவர் தன் இரட்சகரிடமிருந்து ஓர் ஒளியைப் பின்பற்றிக் கொண்டிருப்பார். ஆகையால், கடவுள்-ன் தூதுச்செய்திக்கு எதிராகத் தங்கள் இதயங்கள் கடினமாகிப் போனவர்களுக்கு கேடுதான்; அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டார்கள்.