குர்ஆன் 39:20 — மக்கள் கூட்டங்கள்
தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருப் பவர்களைப் பொறுத்தவரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளுடன், அவர் களுக்காகக் கட்டப்பட்ட மாளிகைகளுக்கு மேல் மாளிகைகளை அவர்கள் பெற்றிருப் பார்கள். இது கடவுள்-ன் வாக்குறுதியாகும், மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிப்பதில்லை.
[39:19] தண்டனைக்குத் தகுதியாகி விட்டவர்கள் சம்பந்தமாக, ஏற்கெனவே நரகத்தில் இருப்பவர்களை நீர் காப்பாற்றி விட முடியுமா?
[39:21] விண்ணிலிருந்து கடவுள் தண்ணீரை இறக்கி அனுப்புவதையும், பின்னர் அதனை நிலத்தடிக் கிணறுகளில் தேக்கிவைப்பதையும், பின்னர் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட தாவரங்களை உற்பத்தி செய் வதையும், பின்னர் அவை மஞ்சள் நிறமாக மாறும் வரை வளர்வதையும், பின்னர் அவர் அவற்றைக் கூளங்களாக மாற்றி விடுவதையும் நீங்கள் காணவில்லையா? அறிவுத்திறன் கொண்டோருக்கு இது ஒரு நினைவூட்டலாக இருக்கவேண்டும்.