குர்ஆன் 39:33 — மக்கள் கூட்டங்கள்
சத்தியத்தை ஊக்குவித்து, மேலும் அதில் நம்பிக்கை கொள்பவர்களை பொறுத்தவரை, அவர்கள்தான் நன்னெறியாளர்கள்.
[39:32] தன்னிடம் வந்துள்ள சத்தியத்தை நம்ப மறுத்துக் கொண்டிருக்கும் அதே சமயம், கடவுள் மீது பொய்களைக் கற்பித்துக் கூறுகின்ற ஒருவனை விட மிகத் தீயவன் யார்? நம்ப மறுப்பவர்களுக்கு நரகம் ஒரு நியாயமான கூலி தான் அல்லவா?
[39:34] அவர்கள் விரும்புகின்ற அனைத்தையும் தங்கள் இரட்சகரிடமிருந்து அவர்கள் பெறுவார் கள். நன்னெறியாளர்களுக்குரிய வெகுமதி இத்தகையதேயாகும்.