குர்ஆன் 39:32 — மக்கள் கூட்டங்கள்
தன்னிடம் வந்துள்ள சத்தியத்தை நம்ப மறுத்துக் கொண்டிருக்கும் அதே சமயம், கடவுள் மீது பொய்களைக் கற்பித்துக் கூறுகின்ற ஒருவனை விட மிகத் தீயவன் யார்? நம்ப மறுப்பவர்களுக்கு நரகம் ஒரு நியாயமான கூலி தான் அல்லவா?
[39:31] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, உங்களுடைய இரட்சகரின் முன்னால், மக்களாகிய நீங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொள்வீர்கள்.
[39:33] சத்தியத்தை ஊக்குவித்து, மேலும் அதில் நம்பிக்கை கொள்பவர்களை பொறுத்தவரை, அவர்கள்தான் நன்னெறியாளர்கள்.