Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:4 — மக்கள் கூட்டங்கள்

ஒரு மகனைக் கொண்டிருக்க வேண்டுமெனக் கடவுள் விரும்பியிருந்தால், தன்னுடைய படைப்புகளில் இருந்து தான் நாடிய எவரையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இயலும். அவர் துதிப்பிற்குரியவர்; ஒருவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான, அவரே கடவுள்.

[39:3] நிச்சயமாக, மார்க்கம் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்கப்படவேண்டும். அவருடன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள், “கடவுள்-க்கு நெருக்கமாக எங்களைக் கொண்டு செல்வதற்காகவே நாங்கள் அவர்களை இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றோம்; ஏனெனில் அவர்கள் மேலானதொரு நிலையில் இருக்கின்றார்கள்!” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். இத்தகைய பொய்யர்களை, நம்ப மறுப்பவர்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

[39:5] வானங்கள் மற்றும் பூமியை சத்தியத்துடன் அவர் படைத்தார். அவர் இரவைப் பகலின் மீது உருட்டுகின்றார், மேலும் பகலை இரவின் மீது உருட்டுகின்றார்*. சூரியன் மற்றும் சந்திரன், ஒவ்வொன்றையும் ஒரு அளவிற்குட்பட்ட காலத்திற்கு ஓடும்படி அவர் ஆக்கினார். நிச்சயமாக, அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவர்.