Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:5 — மக்கள் கூட்டங்கள்

வானங்கள் மற்றும் பூமியை சத்தியத்துடன் அவர் படைத்தார். அவர் இரவைப் பகலின் மீது உருட்டுகின்றார், மேலும் பகலை இரவின் மீது உருட்டுகின்றார்*. சூரியன் மற்றும் சந்திரன், ஒவ்வொன்றையும் ஒரு அளவிற்குட்பட்ட காலத்திற்கு ஓடும்படி அவர் ஆக்கினார். நிச்சயமாக, அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவர்.

[39:4] ஒரு மகனைக் கொண்டிருக்க வேண்டுமெனக் கடவுள் விரும்பியிருந்தால், தன்னுடைய படைப்புகளில் இருந்து தான் நாடிய எவரையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இயலும். அவர் துதிப்பிற்குரியவர்; ஒருவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான, அவரே கடவுள்.

[39:6] ஒரு மனிதரிலிருந்து அவர் உங்களைப் படைத்தார், பின்னர் அவரிலிருந்து அவருடைய ஜோடியைப் படைத்தார். அவர் எட்டு வகைக் கால்நடைகளை உங்களுக்கு இறக்கி அனுப்பினார். அவர் படைப்பிற்குப் பின் படைப் பாக, இருள் நிறைந்த மூன்று காலக் கட்டங்களில், உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் உங்களைப் படைத்தார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அனைத்து ஆட்சியதிகாரமும் அவருக்குரியது. அவருடன் வேறு தெய்வம் இல்லை. எவ்வாறு நீங்கள் வழி தவறிச் செல்ல இயலும்?