குர்ஆன் 39:41 — மக்கள் கூட்டங்கள்
மனிதர்களுக்காக உண்மை நிரம்பிய இவ் வேதத்தை உம் மூலமாக நாம் வெளிப்படுத்தி யுள்ளோம். பின்னர், வழிநடத்தப்படுகின்ற எவரும் தன் சொந்த நலனிற்காகவே வழி நடத்தப்படுகின்றார். மேலும் வழிதவறிச் செல் கின்ற எவரும் தன் சொந்தக் கேட்டிற்காகவே வழிதவறிச் செல்கின்றார். நீர் அவர்களுக்காக வாதிடுபவர் அல்ல.
[39:40] “இழிவான தண்டனைக்கு உள்ளாகி விட்டவர், மேலும் நிலையானதொரு தண்டனைக்குத் தகுதி பெற்று விட்டவர் யார் என (நீங்கள் கண்டுகொள்வீர்கள்).”
[39:42] ஆன்மாக்களை, அவற்றின் வாழ்க்கையின் முடிவு வரும்பொழுதும், மேலும் தூக்கத்தின் பொழுதும் கடவுள் மரணத்தில் ஆழ்த்து கின்றார். இவ்விதமாக, அவர் சிலவற்றை அவற்றின் தூக்கத்தின் போதே திரும்ப எடுத்துக் கொள்கின்றார், அதே சமயம் மற்றவைகள் அவற்றின் முன்னரே தீர்மானிக் கப்பட்ட தவணை வரை தொடர்ந்து உயிர்வாழ அனுமதிக்கப்படுகின்றன. சிந்திக்கின்ற மக்களுக்கு இது ஒரு படிப்பினையாகத் திகழ வேண்டும்.