குர்ஆன் 39:40 — மக்கள் கூட்டங்கள்
“இழிவான தண்டனைக்கு உள்ளாகி விட்டவர், மேலும் நிலையானதொரு தண்டனைக்குத் தகுதி பெற்று விட்டவர் யார் என (நீங்கள் கண்டுகொள்வீர்கள்).”
[39:39] கூறுவீராக, “என் சமூகத்தாரே, உங்களுக்குச் சிறந்ததை நீங்கள் செய்யுங்கள் மேலும் எனக்கு சிறந்ததை நான் செய்வேன்; நிச்சயமாக நீங்கள் கண்டுகொள்வீர்கள்.
[39:41] மனிதர்களுக்காக உண்மை நிரம்பிய இவ் வேதத்தை உம் மூலமாக நாம் வெளிப்படுத்தி யுள்ளோம். பின்னர், வழிநடத்தப்படுகின்ற எவரும் தன் சொந்த நலனிற்காகவே வழி நடத்தப்படுகின்றார். மேலும் வழிதவறிச் செல் கின்ற எவரும் தன் சொந்தக் கேட்டிற்காகவே வழிதவறிச் செல்கின்றார். நீர் அவர்களுக்காக வாதிடுபவர் அல்ல.