குர்ஆன் 39:43 — மக்கள் கூட்டங்கள்
அவர்களுக்கும் கடவுள்-க்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்குப் பரிந்துரையாளர் களை அவர்கள் கண்டுபிடித்துக் கொண்ட னரா? “அவர்கள் எந்தச் சக்தியையோ அன்றிப் புரிந்து கொள்ளுதலையோ பெற்றிராமல் இருந்தாலுமா?” என்று கூறுவீராக.
[39:42] ஆன்மாக்களை, அவற்றின் வாழ்க்கையின் முடிவு வரும்பொழுதும், மேலும் தூக்கத்தின் பொழுதும் கடவுள் மரணத்தில் ஆழ்த்து கின்றார். இவ்விதமாக, அவர் சிலவற்றை அவற்றின் தூக்கத்தின் போதே திரும்ப எடுத்துக் கொள்கின்றார், அதே சமயம் மற்றவைகள் அவற்றின் முன்னரே தீர்மானிக் கப்பட்ட தவணை வரை தொடர்ந்து உயிர்வாழ அனுமதிக்கப்படுகின்றன. சிந்திக்கின்ற மக்களுக்கு இது ஒரு படிப்பினையாகத் திகழ வேண்டும்.
[39:44] “பரிந்துரை அனைத்தும் கடவுள்-க்குரியது” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சியதிகாரம் அனைத்தும் அவருக்குரியது, பின்னர் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.