குர்ஆன் 39:50 — மக்கள் கூட்டங்கள்
அவர்களுக்கு முன்பிருந்தவர்களும் இதனை யேதான் கூறினார்கள், மேலும் அவர்களுடைய சம்பாத்தியங்கள் அவர்களுக்குச் சற்றும் உதவிடவில்லை.
[39:49] துன்பத்தால் மனிதன் தீண்டப்பட்டால், அவன் நம்மை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான், ஆனால் ஓர் அருட்கொடையை நாம் அவனுக்கு அளித்தவுடன் அவன், “இதனை நான் எனது சாமர்த்தியத்தால் அடைந்தேன்!” என்று கூறுகின் றான். உண்மையில், இது ஒரு சோதனையே ஆகும், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
[39:51] அவர்களுடைய தீய காரியங்களின் பின் விளைவுகளை அவர்கள் அனுபவித்தனர். அதைப்போலவே, தற்காலத் தலைமுறையினரில் உள்ள வரம்பு மீறுபவர்களும் அவர்களுடைய தீயகாரியங்களின் பின் விளைவுகளை அனுபவிப் பார்கள்; அவர்கள் தப்பிக்க முடியாது.