குர்ஆன் 39:51 — மக்கள் கூட்டங்கள்
அவர்களுடைய தீய காரியங்களின் பின் விளைவுகளை அவர்கள் அனுபவித்தனர். அதைப்போலவே, தற்காலத் தலைமுறையினரில் உள்ள வரம்பு மீறுபவர்களும் அவர்களுடைய தீயகாரியங்களின் பின் விளைவுகளை அனுபவிப் பார்கள்; அவர்கள் தப்பிக்க முடியாது.
[39:50] அவர்களுக்கு முன்பிருந்தவர்களும் இதனை யேதான் கூறினார்கள், மேலும் அவர்களுடைய சம்பாத்தியங்கள் அவர்களுக்குச் சற்றும் உதவிடவில்லை.
[39:52] தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ் வாதாரங்களை அதிகரிப்பவரும், மேலும் தடுத்து நிறுத்துபவரும் கடவுள் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாகும்.