குர்ஆன் 39:52 — மக்கள் கூட்டங்கள்
தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ் வாதாரங்களை அதிகரிப்பவரும், மேலும் தடுத்து நிறுத்துபவரும் கடவுள் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாகும்.
[39:51] அவர்களுடைய தீய காரியங்களின் பின் விளைவுகளை அவர்கள் அனுபவித்தனர். அதைப்போலவே, தற்காலத் தலைமுறையினரில் உள்ள வரம்பு மீறுபவர்களும் அவர்களுடைய தீயகாரியங்களின் பின் விளைவுகளை அனுபவிப் பார்கள்; அவர்கள் தப்பிக்க முடியாது.
[39:53] “வரம்புகளை மீறிவிட்ட என் அடியார்களே, கடவுள்-ன் கருணையில் ஒருபோதும் நம்பிக்கை யிழந்து விடாதீர்கள். ஏனெனில் கடவுள் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்றார். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று பிரகடனம் செய்வீராக.