Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:53 — மக்கள் கூட்டங்கள்

“வரம்புகளை மீறிவிட்ட என் அடியார்களே, கடவுள்-ன் கருணையில் ஒருபோதும் நம்பிக்கை யிழந்து விடாதீர்கள். ஏனெனில் கடவுள் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்றார். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று பிரகடனம் செய்வீராக.

[39:52] தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ் வாதாரங்களை அதிகரிப்பவரும், மேலும் தடுத்து நிறுத்துபவரும் கடவுள் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாகும்.

[39:54] தண்டனை உங்களை முந்துவதற்கு முன்னர், நீங்கள் உங்கள் இரட்சகருக்குக் கீழ்ப்படியவும், மேலும் அவருக்கு முற்றிலும் அடிபணியவும் வேண்டும், அதன் பின்னர் நீங்கள் உதவி செய்யப்படமாட்டீர்கள்.