குர்ஆன் 39:54 — மக்கள் கூட்டங்கள்
தண்டனை உங்களை முந்துவதற்கு முன்னர், நீங்கள் உங்கள் இரட்சகருக்குக் கீழ்ப்படியவும், மேலும் அவருக்கு முற்றிலும் அடிபணியவும் வேண்டும், அதன் பின்னர் நீங்கள் உதவி செய்யப்படமாட்டீர்கள்.
[39:53] “வரம்புகளை மீறிவிட்ட என் அடியார்களே, கடவுள்-ன் கருணையில் ஒருபோதும் நம்பிக்கை யிழந்து விடாதீர்கள். ஏனெனில் கடவுள் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்றார். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று பிரகடனம் செய்வீராக.
[39:55] மேலும் நீங்கள் சற்றும் எதிர்பாராதிருக்கும் போது, தண்டனை உங்களை முந்துவதற்கு முன்னர், உங்களுடைய இரட்சகரால் உங்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மிகச்சிறந்த பாதையைப் பின்பற்றுங்கள்.