குர்ஆன் 39:55 — மக்கள் கூட்டங்கள்
மேலும் நீங்கள் சற்றும் எதிர்பாராதிருக்கும் போது, தண்டனை உங்களை முந்துவதற்கு முன்னர், உங்களுடைய இரட்சகரால் உங்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மிகச்சிறந்த பாதையைப் பின்பற்றுங்கள்.
[39:54] தண்டனை உங்களை முந்துவதற்கு முன்னர், நீங்கள் உங்கள் இரட்சகருக்குக் கீழ்ப்படியவும், மேலும் அவருக்கு முற்றிலும் அடிபணியவும் வேண்டும், அதன் பின்னர் நீங்கள் உதவி செய்யப்படமாட்டீர்கள்.
[39:56] “கடவுள்-ன் கட்டளைகளை அலட்சியம் செய்ததற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்; நிச்சயமாக நான் பரிகாசம் செய்பவர்களில் ஒருவனாகவே இருந்தேன்,” என்று ஓர் ஆன்மா கூறாமலிருப்பதற்காக.