Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:68 — மக்கள் கூட்டங்கள்

கொம்பு ஊதப்படும், உடனே கடவுள்-ஆல் காப்பாற்றப்பட இருப்பவர்களைத் தவிர, வானங் கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் சுய நினைவை இழந்துவிடுவார்கள். பின்னர் அது இன்னொரு முறை ஊதப்படும். உடனே அவர்கள் அனைவரும் உற்று நோக்கியவாறு* எழுந்து நிற்பார்கள்.

[39:67] கடவுள்-ன் மகத்துவத்தை அவர்கள் ஒரு போதும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று முழு உலகும் அவருடைய கைப்பிடிக்குள் இருக்கும். உண்மையில், பிரபஞ்சங்கள் அவருடைய வலக்கரத்திற்குள்* மடிக்கப்பட்டுள்ளது. அவர் துதிப்பிற்குரியவர்; பங்குதாரர்கள் தேவைப்படுவதை விட்டும் அவர் மிகவும் உயர்ந்தவர்.

[39:69] பின்னர் பூமி தன் இரட்சகரின் ஒளியால் பிரகாசி க்கும். பதிவேடு வெளிப்படையாக தெரிவிக்கப் படும், மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களும் மற்றும் சாட்சிகளும் முன் கொண்டு வரப்படு வார்கள். சிறிதளவும் அநீதமின்றி, ஒவ்வொரு வரும் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.