குர்ஆன் 39:72 — மக்கள் கூட்டங்கள்
“நரகத்தின் வாயில்களுக்குள் நுழையுங்கள், அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப் பீர்கள்” என்று கூறப்படும். ஆணவம் கொண்டவர்களுக்கு என்ன ஒரு துன்பகரமான விதி.
[39:71] நம்ப மறுப்பவர்கள் நரகத்திற்கு கூட்டம் கூட்டமாக வழிநடத்தப்படுவார்கள். அவர்கள் அதனை அடைந்து, மேலும் அதன் வாயில்கள் திறக்கப்படும் பொழுது, அதன் காவலர்கள், “உங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளை உங்களுக்கு ஓதிக்காட்டிய, மேலும் இந்த நாளின் சந்திப்பைக் குறித்து உங்களை எச்சரித்த தூதர்களை, உங்களிலிருந்தே நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லையா?” என்று கூறுவார்கள். அவர்கள், “ஆம் உண்மையில். ஆனால் நம்ப மறுப்பவர்கள் மீது ‘தண்டனை’ எனும் வார்த்தை ஏற்கனவே முத்திரையிடப்பட்டு விட்டது” என்று பதிலளிப்பார்கள்.
[39:73] தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருந் தவர்கள் சுவனத்திற்கு கூட்டம் கூட்டமாக வழி நடத்தப்படுவார்கள். அவர்கள் அதனை அடைந்து, மேலும் அதன் வாயில்கள் திறக்கப் படும் பொழுது, அதன் காவலர்கள், “உங்கள் மீது அமைதி நிலவுவதாக; நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆகையால், இங்கேயே நீங்கள் என்றென்றும் தங்கியிருப்பீர்கள்” என்று கூறுவார்கள்.