Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:73 — மக்கள் கூட்டங்கள்

தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருந் தவர்கள் சுவனத்திற்கு கூட்டம் கூட்டமாக வழி நடத்தப்படுவார்கள். அவர்கள் அதனை அடைந்து, மேலும் அதன் வாயில்கள் திறக்கப் படும் பொழுது, அதன் காவலர்கள், “உங்கள் மீது அமைதி நிலவுவதாக; நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆகையால், இங்கேயே நீங்கள் என்றென்றும் தங்கியிருப்பீர்கள்” என்று கூறுவார்கள்.

[39:72] “நரகத்தின் வாயில்களுக்குள் நுழையுங்கள், அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப் பீர்கள்” என்று கூறப்படும். ஆணவம் கொண்டவர்களுக்கு என்ன ஒரு துன்பகரமான விதி.

[39:74] அவர்கள், “தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு நிறைவேற்றித் தந்த, மேலும் பூமிக்கு எங்களை வாரிசாக ஆக்கி, நாங்கள் விரும்பியவாறு சுவனத்தில் மகிழ்ந்திருக்கச் செய்த கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்று கூறுவார்கள். பணிபுரிவோருக்கு என்ன ஒரு அழகிய வெகுமதி!