குர்ஆன் 39:74 — மக்கள் கூட்டங்கள்
அவர்கள், “தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு நிறைவேற்றித் தந்த, மேலும் பூமிக்கு எங்களை வாரிசாக ஆக்கி, நாங்கள் விரும்பியவாறு சுவனத்தில் மகிழ்ந்திருக்கச் செய்த கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்று கூறுவார்கள். பணிபுரிவோருக்கு என்ன ஒரு அழகிய வெகுமதி!
[39:73] தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருந் தவர்கள் சுவனத்திற்கு கூட்டம் கூட்டமாக வழி நடத்தப்படுவார்கள். அவர்கள் அதனை அடைந்து, மேலும் அதன் வாயில்கள் திறக்கப் படும் பொழுது, அதன் காவலர்கள், “உங்கள் மீது அமைதி நிலவுவதாக; நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆகையால், இங்கேயே நீங்கள் என்றென்றும் தங்கியிருப்பீர்கள்” என்று கூறுவார்கள்.
[39:75] தங்கள் இரட்சகரைத் துதித்தவாறும் புகழ்ந்த வாறும், அரியாசனத்தைச் சுற்றி வானவர்கள் மிதந்து கொண்டிருப்பதை நீர் காண்பீர். அனை வருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட பின்னர், “பிரபஞ்சத்தின் இரட்சகரான, கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்று பிரகடனம் செய்யப்படும்.