Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:75 — மக்கள் கூட்டங்கள்

தங்கள் இரட்சகரைத் துதித்தவாறும் புகழ்ந்த வாறும், அரியாசனத்தைச் சுற்றி வானவர்கள் மிதந்து கொண்டிருப்பதை நீர் காண்பீர். அனை வருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட பின்னர், “பிரபஞ்சத்தின் இரட்சகரான, கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்று பிரகடனம் செய்யப்படும்.

[39:74] அவர்கள், “தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு நிறைவேற்றித் தந்த, மேலும் பூமிக்கு எங்களை வாரிசாக ஆக்கி, நாங்கள் விரும்பியவாறு சுவனத்தில் மகிழ்ந்திருக்கச் செய்த கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்று கூறுவார்கள். பணிபுரிவோருக்கு என்ன ஒரு அழகிய வெகுமதி!