Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:10 — பெண்கள்

அநாதைகளின் சொத்துக்களை அநீதமாக செலவு செய்கின்றவர்கள் தங்கள் வயிறுகளுக்குள் நெருப்பை உட்கொள்கின்றார்கள். மேலும் நரகில் துன்பப்படுவார்கள்.

[4:9] தங்களுக்குப் பின்னால் தங்களுடைய சொந்தக் குழந்தைகளை விட்டுச் செல்வது பற்றி கவலைப் படுபவர்கள், கடவுள்-ஐ கவனத்தில் கொண்டும் மேலும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

[4:11] உங்கள் குழந்தைகளின் நலனிற்காக ஒரு உயிலைக் கடவுள் விதியாக்குகின்றார். பெண்ணின்* பங்கைப் போல் இரு மடங்கு ஆண் பெறவேண்டும். வாரிசுகள் பெண்களாக மட்டும் இருவருக்கு மேல் இருந்தால், உயிலில் மூன்றில் - இரண்டு பங்குபெற வேண்டும். ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால் அவளுக்கு ஒரு - பாதி கிடைக்க வேண்டும். இறந்தவர் ஏதேனும் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தால் இறந்த வரின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் ஆறில் - ஒரு பங்கை பெறவேண்டும். அவருக்கு குழந்தை கள் இல்லாமல் பெற்றோர் மட்டும் வாரிசாக இருந்தால் அவருடைய தாயார் மூன்றில் ஒரு பங்கைப் பெறவேண்டும். அவருக்கு உடன் பிறந்தவர்கள் இருந்தால் - தாயார் ஆறில் ஒருபங்கைப் பெறவேண்டும். இவை அனைத்தையும் இறந்தவரின் உயில்* ஏதாவது இருந்தால் அதையும், மேலும் எல்லா கடன்களையும் கொடுத்த பிறகுதான் நிறைவேற்ற வேண்டும். உங்கள் பெற்றோர்களும் மற்றும் பிள்ளைகளும் என்று வரும்போது அவர்களில் உண்மையில் உங்களுக்கு சிறந்தவர்கள் மேலும் அனுகூலமானவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியாது. இது கடவுள்-ன் சட்டம் ஆகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.