குர்ஆன் 4:11 — பெண்கள்
உங்கள் குழந்தைகளின் நலனிற்காக ஒரு உயிலைக் கடவுள் விதியாக்குகின்றார். பெண்ணின்* பங்கைப் போல் இரு மடங்கு ஆண் பெறவேண்டும். வாரிசுகள் பெண்களாக மட்டும் இருவருக்கு மேல் இருந்தால், உயிலில் மூன்றில் - இரண்டு பங்குபெற வேண்டும். ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால் அவளுக்கு ஒரு - பாதி கிடைக்க வேண்டும். இறந்தவர் ஏதேனும் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தால் இறந்த வரின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் ஆறில் - ஒரு பங்கை பெறவேண்டும். அவருக்கு குழந்தை கள் இல்லாமல் பெற்றோர் மட்டும் வாரிசாக இருந்தால் அவருடைய தாயார் மூன்றில் ஒரு பங்கைப் பெறவேண்டும். அவருக்கு உடன் பிறந்தவர்கள் இருந்தால் - தாயார் ஆறில் ஒருபங்கைப் பெறவேண்டும். இவை அனைத்தையும் இறந்தவரின் உயில்* ஏதாவது இருந்தால் அதையும், மேலும் எல்லா கடன்களையும் கொடுத்த பிறகுதான் நிறைவேற்ற வேண்டும். உங்கள் பெற்றோர்களும் மற்றும் பிள்ளைகளும் என்று வரும்போது அவர்களில் உண்மையில் உங்களுக்கு சிறந்தவர்கள் மேலும் அனுகூலமானவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியாது. இது கடவுள்-ன் சட்டம் ஆகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[4:10] அநாதைகளின் சொத்துக்களை அநீதமாக செலவு செய்கின்றவர்கள் தங்கள் வயிறுகளுக்குள் நெருப்பை உட்கொள்கின்றார்கள். மேலும் நரகில் துன்பப்படுவார்கள்.
[4:12] உங்கள் மனைவியருக்கு குழந்தைகள் இல்லா திருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் நீங்கள் பாதியைப் பெறுவீர்கள். அவர்களுக்கு குழந்தை கள் இருந்தால் நீங்கள் நான்கில் ஒரு பங்கைப் பெறுவீர்கள். இவை அனைத்தையும் அவர்கள் ஏதேனும் உயில் விட்டுச் சென்று இருந்தால் அதையும், மேலும் எல்லா கடன்களையும் கொடுத்த பிறகுதான் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் விட்டுச் சென்றதில், உங்களுக்கு குழந்தைகள் இல்லாதிருந்தால் அவர்கள் நான்கில்-ஒரு பங்கைப் பெறுவார்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் அவர்கள் எட்டில் ஒரு பங்கைப் பெறுவார்கள். இவை அனைத்தையும் நீங்கள் ஏதேனும் உயில்விட்டுச் சென்றிருந்தால் அதையும் மேலும் எல்லா கடன்களையும் கொடுத்த பிறகுதான் நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் ஆணோ அல்லது பெண்ணோ தனி ஆளாக இருந்து அவருக்கு இரண்டு உடன் பிறப்புக்களை, ஆணோ அல்லது பெண்ணோ, விட்டுச் சென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் ஆறில்- ஒரு பங்கு உரிமையை பெறுவார்கள். ஒரு வேளை அதிகமான உடன் பிறப்புகள் இருந்தால், அப்போது அவர்கள் மூன்றில்-ஒரு பங்கை சமமாக பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இவை அனைத்தையும் ஏதேனும் உயில் விட்டுச் சென்று இருந்தால் அதையும் மேலும் எல்லாக் கடன்களையும் கொடுத்தபிறகுதான் நிறைவேற்ற வேண்டும். இதனால் எவரும் பாதிக்கப்படமாட்டார்கள். இது கடவுள் -ஆல் கட்டளையிடப்பட்ட ஒரு தீர்வாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், இரக்கமுள்ளவர்.