குர்ஆன் 4:112 — பெண்கள்
எவர் ஒருவர் ஒரு பாவத்தை சம்பாதித்து, பின்னர் அதற்காக, ஒரு நிரபராதியைக் குற்றம் சுமத்து கின்றாரோ, அவர் ஓர் இறை நிந்தனையையும் மேலும் ஒரு பெருங்குற்றத்தையும் புரிந்தவர் ஆவார்.
[4:111] எவர் ஒருவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கின்றாரோ, அவர் தன் சொந்தஆன்மாவிற்குக் கேடாகவே அதைச் சம்பாதிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[4:113] கடவுள்-ன் அருளும் மேலும் அவரது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், அவர்களில் சிலர் உம்மை வழி தவறச் செய்திருப் பார்கள். அவர்கள் தங்களை மட்டுமே தவறான வழியில் செலுத்திக்கொள்கின்றனர் மேலும் உமக்கு அவர்கள் ஒருபோதும் சிறிதளவும் தீங்கிழைத்து விட இயலாது, கடவுள் உமக்கு வேதத் தையும், ஞானத்தையும் இறக்கி அனுப்பியுள்ளார், மேலும் உமக்கு அவர், நீர் ஒரு போதும் அறிந்திராதவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளார். உண்மையில், உம்மீதான கடவுள்-ன் அருட்கொடை மகத்தானது.