Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:123 — பெண்கள்

இது உங்களுடைய விருப்பங்களுக்கோ அல்லது வேதத்தையுடைய மக்களின் விருப்பங்களுக்கோ ஏற்ப உள்ளதல்ல. தீமைபுரிகின்ற எவர் ஒருவரும் அதற்கான தண்டனையைப் பெறுகின்றார், மேலும் கடவுள்-க்கு எதிராக அவருக்கு எந்த உதவியாளரோ அல்லது ஆதரவாளரோ இருக்கமாட்டார்.

[4:122] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை, நாம் அவர்களை ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் அனுமதிப்போம், அவற்றில் அவர்கள் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள். கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதி இவ்வித மானதே. எவருடைய கூற்றுக்கள் கடவுள் - உடையதை விட சத்தியம் நிறைந்தது?

[4:124] நம்பிக்கை கொண்டவர்களாக நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை, ஆணோ, பெண்ணோ, சிறிதளவும் அநீதியின்றி அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.