குர்ஆன் 4:126 — பெண்கள்
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. கடவுள் எல்லாப் பொருட்களின் மீதும் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளார்.
[4:125] கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிந்து ஆப்ர ஹாமின் மார்க்க கொள்கையான ஏகத்துவத்திற்கேற்ப நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்ற ஒருவரை விட, தன் மார்க்கத்தில் சிறப்பாக வழி நடத்தப்பட்டவர் யார்? கடவுள் ஆப்ரஹாமை அன்பிற்குரியதொரு நண்பராகத் தேர்ந் தெடுத்துக் கொண்டார்.
[4:127] பெண்களைக் குறித்து அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றார்கள்; “கடவுள் அவர்களைக் குறித்து, வேதத்தில் உங்களுக்கு எடுத்துரைத்துள்ள படியே அறிவுறுத்துகின்றார். நீங்கள் அநாதைப் பெண்களை மணந்து கொள்ள விரும்பும் போது, அவர்களுக்குரிய வரதட் சணைத் தொகையைத் தராது நீங்கள் ஏமாற்றிய அந்த உரிமைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். நீங்கள் அவர்களை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது. அத்துடன் அநாதைச் சிறுவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அநாதைகளை நீங்கள் நீதமாக நடத்த வேண்டும். நீங்கள் நல்லது எதனைச் செய்தாலும் கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவர் ஆவார்,” என்று கூறுவீராக.