குர்ஆன் 4:140 — பெண்கள்
அவர் உங்களுக்கு வேதத்தில்: கடவுள்-ன் வெளிப்பாடுகள் பரிகசிக்கப்படுவதையும் மேலும் கேலி செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அவர்கள் வேறு விஷயத்தில் முழுமையாக திரும்பாதவரை நீங்கள் அவர்களுடன் அமர வேண்டாம், என்று அறிவுறுத்துகின்றார். இல்லாவிடில், நீங்களும் அவர்களைப் போன்று குற்றத்திற்குள்ளாகி விடுவீர்கள். கடவுள் நயவஞ்சகர்களையும், நம்பமறுப்பவர்களையும் நரகில் ஒன்று கூட்டுவார்.
[4:139] அவர்கள்தான் நம்பிக்கையாளர்களுடன் அல்லாது நம்பமறுப்பவர்களுடன் தங்கள் நட்புறவை வைத்துக் கொள்பவர்கள். அவர்களிடத்தில் கண்ணியத்தை அவர்கள் தேடுகின்றனரா? எல்லாக் கண்ணியமும் கடவுள்-க்கு மட்டுமே உரியது.
[4:141] அவர்கள் உங்களைக் கவனித்தவாறு காத்திருக் கின்றனர்; கடவுள்-இடமிருந்து நீங்கள் வெற்றியை அடைந்தால் (உங்களிடம்) அவர்கள் “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றார்கள். ஆனால் நம்ப மறுப்பவர் களுக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் (அவர்களிடம்) “நாங்கள் உங்கள் பக்கம் நின்று மேலும் நம்பிக்கையாளர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாக்கவில்லையா?” என்று அவர்கள் கூறுகின்றார்கள். கடவுள் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் உங்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வார். கடவுள் நம்ப மறுப்பவர்களை, நம்பிக்கையாளர்களை மிகைத்து வெற்றி கொள்ளும்படி ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்.