குர்ஆன் 4:147 — பெண்கள்
நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக மாறி மேலும், நம்பிக்கையும் கொண்டுவிட்டால் உங்களைத் தண்டிப்பதால் கடவுள்-க்கு என்ன பலன்? கடவுள் நன்றி பாராட்டுபவர், எல்லாம் அறிந்தவர்.
[4:146] வருந்தித்திருந்தி, சீர்திருத்தி, கடவுள்-ஐ இறுகப்பற்றி, மேலும் தங்களுடைய மார்க் கத்தை முற்றிலுமாக கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணிப்பவர்கள் மட்டுமே நம்பிக்கை யாளர்களுடன் கணக்கிடப்படுவார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு மகத்தான வெகுமதி கொண்டு அருள்புரிவார்.
[4:148] பெரும்அநீதியுடன் ஒருவர் நடத்தப்பட்டால் தவிர, தீயவார்த்தைகள் கூறப்படுவதைக் கடவுள் விரும்புவதில்லை. கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.