குர்ஆன் 4:148 — பெண்கள்
பெரும்அநீதியுடன் ஒருவர் நடத்தப்பட்டால் தவிர, தீயவார்த்தைகள் கூறப்படுவதைக் கடவுள் விரும்புவதில்லை. கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.
[4:147] நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக மாறி மேலும், நம்பிக்கையும் கொண்டுவிட்டால் உங்களைத் தண்டிப்பதால் கடவுள்-க்கு என்ன பலன்? கடவுள் நன்றி பாராட்டுபவர், எல்லாம் அறிந்தவர்.
[4:149] நீங்கள் நன்னெறியான காரியம் புரிந்தால் - வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாக வோ - அல்லது ஒரு வரம்பு மீறலைப் பொறுத்துக் கொண்டால், கடவுள் பிழை பொறுப்பவராகவும், சர்வ சக்தியுடையவராகவும் இருக்கின்றார்.