Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:154 — பெண்கள்

மேலும், நாம் அவர்களிடம் உடன்படிக்கை எடுத்தவாறு, சினாய்மலையினை அவர்களுக்கு மேலாக நாம் உயர்த்தினோம். மேலும் நாம் அவர் களிடம் “ நுழைவாயிலில் பணிவோடு நுழையுங் கள்” என்று கூறினோம். மேலும் நாம் அவர் களிடம்” ஸப்பத்தின் புனிதத்தை கெடுக்கா தீர்கள்.” என்று கூறினோம். உண்மையில், நாம் அவர்களிடம் ஓர் உறுதியான உடன்படிக்கை எடுத்தோம்.

[4:153] வேதத்தையுடைய மக்கள் விண்ணிலிருந்து ஒரு புத்தகத்தை அவர்களுக்கு கொண்டு வரும்படி உம்மிடம் சவால்விடுகின்றார்கள்! அவர்கள் அதைவிடவும் அதிகமாக “கடவுள்-ஐ எங்களு க்கு உருவமாக காட்டும்” என்று கூறியவர்களாக மோஸஸிடம் கேட்டார்கள். அதன் விளைவாக அவர்களுடைய அகம்பாவத்தின் விளைவாக மின்னல் அவர்களைத் தாக்கியது, கூடுதலாக, அவர்கள் அனைத்து அற்புதங்களையும் கண்ட பின்னரும், அவர்கள் கன்றுக்குட்டியை வழிபட்டனர். இருப்பினும் நாம் இவை அனைத்தையும் மன்னித்தோம் நாம் ஆழ்ந்த அற்புதங்களைக் கொண்டு மோஸஸிற்கு ஆதரவளித்தோம்.

[4:155] தங்களுடைய உடன்படிக்கைகளை மீறியதற் காகவும் கடவுள் -ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்ததற்காகவும் வேதம் வழங்கப்பட்டவர்களை நீதமின்றிக்கொலை செய்ததற்காகவும் மேலும் “எங்கள் மனங்கள் முடிவெடுத்துவிட்டன.” என்று கூறியதற்காகவும் (அவர்கள் தண்டனைக்கு உள்ளாகினர்) உண்மையில், கடவுள் தான் அவர்களின் மனங்களை, அவர்களின் நம்ப மறுத்தலின் காரணமாக, முத்திரையிட்டவர், மேலும் இதன் காரணமாகவே, அரிதாகவே தவிர, அவர்கள் நம்பிக்கை கொள்ளத் தவறி விடுகின்றனர்.