Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:155 — பெண்கள்

தங்களுடைய உடன்படிக்கைகளை மீறியதற் காகவும் கடவுள் -ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்ததற்காகவும் வேதம் வழங்கப்பட்டவர்களை நீதமின்றிக்கொலை செய்ததற்காகவும் மேலும் “எங்கள் மனங்கள் முடிவெடுத்துவிட்டன.” என்று கூறியதற்காகவும் (அவர்கள் தண்டனைக்கு உள்ளாகினர்) உண்மையில், கடவுள் தான் அவர்களின் மனங்களை, அவர்களின் நம்ப மறுத்தலின் காரணமாக, முத்திரையிட்டவர், மேலும் இதன் காரணமாகவே, அரிதாகவே தவிர, அவர்கள் நம்பிக்கை கொள்ளத் தவறி விடுகின்றனர்.

[4:154] மேலும், நாம் அவர்களிடம் உடன்படிக்கை எடுத்தவாறு, சினாய்மலையினை அவர்களுக்கு மேலாக நாம் உயர்த்தினோம். மேலும் நாம் அவர் களிடம் “ நுழைவாயிலில் பணிவோடு நுழையுங் கள்” என்று கூறினோம். மேலும் நாம் அவர் களிடம்” ஸப்பத்தின் புனிதத்தை கெடுக்கா தீர்கள்.” என்று கூறினோம். உண்மையில், நாம் அவர்களிடம் ஓர் உறுதியான உடன்படிக்கை எடுத்தோம்.

[4:156] நம்ப மறுத்துக் கொண்டிருப்பதற்காகவும், மேலும் மேரியைக் குறித்து ஒரு பெரும் பொய்யைக் கூறிக்கொண்டிருப்பதற்காகவும் (அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்). இயேசுவின் * “உடலை” சிலுவையில் அறைதல்