குர்ஆன் 4:156 — பெண்கள்
நம்ப மறுத்துக் கொண்டிருப்பதற்காகவும், மேலும் மேரியைக் குறித்து ஒரு பெரும் பொய்யைக் கூறிக்கொண்டிருப்பதற்காகவும் (அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்). இயேசுவின் * “உடலை” சிலுவையில் அறைதல்
[4:155] தங்களுடைய உடன்படிக்கைகளை மீறியதற் காகவும் கடவுள் -ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்ததற்காகவும் வேதம் வழங்கப்பட்டவர்களை நீதமின்றிக்கொலை செய்ததற்காகவும் மேலும் “எங்கள் மனங்கள் முடிவெடுத்துவிட்டன.” என்று கூறியதற்காகவும் (அவர்கள் தண்டனைக்கு உள்ளாகினர்) உண்மையில், கடவுள் தான் அவர்களின் மனங்களை, அவர்களின் நம்ப மறுத்தலின் காரணமாக, முத்திரையிட்டவர், மேலும் இதன் காரணமாகவே, அரிதாகவே தவிர, அவர்கள் நம்பிக்கை கொள்ளத் தவறி விடுகின்றனர்.
[4:157] மேலும் கடவுள்-ன் தூதரும், மேரியின் மகன் இயேசுவுமாகிய மெசையாஹ்வை நாங்கள் கொன்றோம், என்று கோரியதற்காகவும். உண்மையில், அவர்கள் ஒருபோதும் அவரைக் கொல்லவில்லை, அவர்கள் ஒருபோதும் அவரைச் சிலுவையில் அறையவுமில்லை - அவர்கள் செய்ததாக அவர்கள் எண்ணிக் கொள்ளுமாறு செய்யப்பட்டனர். இந்த விஷயத்தில் தர்க்கம் செய்யும் எல்லாப்பிரிவினரும் இப்பிரச்சனை குறித்து முழுக்க முழுக்க சந்தேகத்திலேயே உள்ளனர். அவர்கள் எந்த அறிவும் பெற்றிருக்கவில்லை; அவர்கள் யூகிக்க மட்டுமே செய்கின்றனர். மிக உறுதியாக அவர்கள் அவரை ஒரு போதும் கொல்லவில்லை.*